தலைமை காவலர் - கடற்படை அதிகாரியிடையே மோதல்!

  அனிதா   | Last Modified : 08 May, 2019 12:26 pm
confrontation-between-naval-officers-and-chief-police

சென்னையில் நேற்றிரவு ரோந்து பணியின் போது, தலைமை காவலருக்கும் கடற்படை அதிகாரிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் காயமடைந்தனர். 

சென்னை அண்ணா சாலையில் உள்ள காபி ஹவுஸ் கடைக்கு எதிரே நேற்றிரவு உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த  அசிதேஷ்(28) என்பவர், அவரது நண்பர்களுடன் டீ அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது ரோந்து பணி மேற்கொண்ட தலைமை காவலர் தினேஷ் குமார், சற்று குடிபோதையில் இருந்த அசிதேசை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அசிதேஷ் சிகரெட் பிடித்து கொண்டும் கிண்டலடித்து சிரித்து கொண்டும் இருந்ததாக தெரிகிறது. இதனால் தலைமை காவலர் அசிதேஷ் கையை பிடித்து செல்லுமாறு தள்ளியுள்ளார். ஆத்திரமடைந்த அசிதேஷ் தலைமை காவலரை தாக்கியதாகவும், பதிலுக்கு தலைமை காவலர் அசிதேசை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலில்  அசிதேஷ்க்கு மூக்கில் காயம் ஏற்ப்பட்டது.  உள் காயம் ஏற்பட்ட தலைமை காவலர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அசிதேசை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் அவர் இந்திய கடற்படையில் பணியாற்றுபவர் என்பது தெரியவந்தது. மேலும் தன்னை தாக்கிய தலைமை காவலர் மற்றும் சக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அசிதேஷ் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close