தலைமை தபால் நிலைய கட்டிடத்துக்கே இந்த பரிதாப நிலையா?

  அனிதா   | Last Modified : 08 May, 2019 05:12 pm
the-roof-of-the-head-post-office-is-collapsing

சென்னை பாரிமுனை அருகே உள்ள தலைமை தபால் நிலைய மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், கட்டிடத்துக்கு அருகே பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 

பாரிமுனை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மிகவும் பழைய கட்டிடத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள கூம்பு வடிவிலான பகுதி இடிந்து கீழே விழும் அபாய நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது.

பாரிமுனையின் முக்கிய சாலையான ராஜாஜி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வாகனங்களும் சென்று வருவதால், இக்கட்டிடத்தை சுற்றி பொதுமக்கள் யாரும் செல்லாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close