அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நோயாளி!

  அனிதா   | Last Modified : 09 May, 2019 10:14 am
patient-who-committed-suicide-by-throwing-the-government-hospital-toilet

கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற நோயாளி கழிவறையில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி அவரது மனைவி சீதா மற்றும் அவரது குடும்பத்தினருடன் அங்கு உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். ஏற்கனவே ஆஸ்மா நோய்,  முதுகுத் தண்டு வலியால் பாதிக்கப்பட்டு இருந்த கோவிந்தசாமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

ஆண்கள் பிரிவில்  உள்நோயாளியாக அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று, நீண்ட நேரம் படுக்கையறைக்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனை முழுவதும் தேடி கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்குள்ள கழிவறைக்கு சென்ற நோயாளி ஒருவர், கோவிந்தசாமி கழிவறையின்  ஜன்னல் கம்பியில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். 

இதையடுத்து, நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை கழிவறையில்  நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close