நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் வைகாசி உற்சவ கொடியேற்றம்..

  அனிதா   | Last Modified : 09 May, 2019 11:07 am
hundred-years-later-the-vaikashi-festival-in-temple

கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை ஞானவல்லி உடனுறை சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று வைகாசி உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை அருள்மிகு செந்நெறிச் செல்வனார் ஸ்ரீ ஞானவல்லி உடனுறை ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருக்கோவில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மார்களால் போற்றிப் பாடப்பெற்ற மகத்துவங்கள் பல கொண்ட அற்புத திருக்கோவில். இக்கோவிலில் அருள்மிகு கடன் நிவர்த்தீஸ்வரர், காத்தனை தெய்வமாக  எழுந்தருளி தன்னை அர்ச்சித்து வணங்கும் அனைவருடைய அனைத்து விதமான கடன்களையும் நீக்கி அருள் புரிந்து வருகிறார்.

எந்த சைவக் கோவிலிலும் இல்லாத வகையில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மேலும் சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று வித துர்க்கை அம்மன்  இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவரான செந்நெறிச் செல்வனாரை வழிபடும் வகையில் அமையப்பெற்ற மகா உன்னதமான சூரிய பூஜை இத்திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருக்கோவிலில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

10 நாள் நடைபெறும் உற்சவ திருவிழாவில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏழாம் நாள் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணமும், ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close