அலைபேசியில் பேசியவாறு மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த இளம்பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள வடக்கு மாட வீதியில் ராம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் தீபிகா (16) நேற்றிரவு தனது வீட்டு மாடியில் நின்றவாறு அலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தீபிகாவை அவரது பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயனாவரம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை தீபிகா காதலித்து வந்ததும், இரு குடும்பத்தாரும் காதலுக்கு அனுமதி வழங்கி உள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து தீபிகா அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது நிலை தடுமாறிதான் விழுந்தாரா? அல்லது வேறு ஏதும் காதல் பிரச்சனை காரணமாக தீபிகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபிகா, தற்போது மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
newstm.in