சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரில் திடீர் தீ விபத்து!

  அனிதா   | Last Modified : 09 May, 2019 01:14 pm
a-fire-broke-out-in-a-car-parked-on-the-road

சென்னை இராயப்பேட்டை பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை இராயப்பேட்டை பகுதியில் உள்ள பாலாஜி நகர் முதல் தெருவில் நேற்றிரவு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடிரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இச்சம்பவம் குறித்து இராயப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close