சூறாவளியில் சாய்ந்த ஒரு லட்சம் வாழை மரங்கள்... விவசாயிகள் வேதனை

  அனிதா   | Last Modified : 09 May, 2019 03:00 pm
about-1-lakh-banana-trees-damaged-in-hurricane-wind

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஏற்பட்ட திடீர் சூறாவளி காற்றில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா, சிலை பிள்ளையார் புதூர், நத்தம் காட்டுப்புத்தூர், ஐனா பட்டி, ஆராய்ச்சிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில்அங்கு நேற்று திடீர் சூறாவளி காற்று வீசியது. இதில், சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுமார் 25-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

சூறாவளி காற்றில் சிக்கி வாழைமரங்கள் சேதமடைந்ததை அறிந்த முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்  சேதத்தின்  மதிப்பீட்டை உடனடியாக கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொட்டியம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

வாழை மரங்கள் காய்த்து 75 சதவீதம் பருவமடைந்த நிலையில், சூறாவளியில் சேதமடைந்ததால் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு உள்ளது. மீண்டும் அங்கு மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு  உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close