இரு தரப்பு மோதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!

  அனிதா   | Last Modified : 09 May, 2019 02:58 pm
bilateral-confrontation-struggle-to-take-action

 கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே குமிட்டிபதி என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது  மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை மற்றொரு தரப்பினர், இழிவுபடுத்தி, குச்சி, கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 6 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close