திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி வசந்த உற்சவம்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 11:23 am
thiruvanaikaval-jambushwarar-temple-function

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்  ஸ்தலமான திருச்சி  திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி வசந்த உற்சவம்  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும்,  கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது மான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

உலகில் அனைவரும் ஷேமமாகவும், ஜல விருத்தி பெறவும், சுபிட்சம் அடையவும் வேண்டி இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது வசந்த உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி தாயார் உற்சவ மூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி ஆலய பிரகாரத்தில் வலம் வந்து, பின்னர் ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்  பின்னர் 13 வகையான தீபாரதனைகள் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியையும் அம்பாளையும்  தரிசனம் செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close