திருச்சி மருத்துவக் கல்லூரி அருகே தீ விபத்து

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 11:31 am
fire-accident-in-trichy

திருச்சி மிளகுபாறை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள  டீக்கடையில் கேஸ் சிலிண்டர் கசிந்து  திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மிளகுபாறை மருத்துவ கல்லூரி எதிரே உள்ள டீக்கடையில் நேற்று மாலை திடீரென கேஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. டீக்கடை முழுவதும் தீ பரவியதை அடுத்து, உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டர் வெடித்து சிதறாமல், உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தீ விபத்து குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதல் கட்ட விசாரணையில் புதிய சிலின்டரை இணைக்கும் போது, கவனக்குறைவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close