இரண்டு கோடி ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் !

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 12:04 pm
one-billion-rupees-confiscated-in-coimbatore

கோவைம் மாவட்டம் சூலூரில் வியாழக்கிழமை  பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ 1 கோடியே 98 லட்சத்து 6400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சூலூர் வேளாண்மை பல்கலைக்கழக  வரைகலை அதிகாரி  ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் சூலூர் அருகே சோளக்காட்டுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ஒரு கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் இருந்தது தெரியவந்தது..

இந்த பணமானது கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம்பாளையம் ஏ.டி.எம் மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக  அந்த வேனில் வந்தவர்கள் கூறினர். ஆனால், உரிய ஆவனங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து  சூலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close