கும்பகோணத்தில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..!

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 01:17 pm
plastic-confiscated-in-kumbakonam

கும்பகோணத்தில் நான்காவது நாளாக தடைசெய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு. ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்து ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர் நகராட்சி அதிகாரிகள்.

கும்பகோணத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள்,தட்டுகள் அனுமதியின்றி உற்பத்தி செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  தகவலையடுத்து நகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையிலான‌ துப்புரவு ஆய்வாளர்கள் சோதனையிட்டனர்.  அதில், பட்டம் சந்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கப்புகள்,தட்டுக்களை உற்பத்தி செய்த நிறுவனத்திலிருந்த பொருட்களை பறிமுதல் செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.

இதே போல் காமாட்சி ஜோசியர் தெருவிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.   இரு நிறுவனங்களிலும் 5 டன் எடையுள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்  செய்த அதிகாரிகள், அந்நிறுவனங்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close