சென்னையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் வழிப்பறி கும்பல் கைது!

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 06:45 pm
police-arrested-two-theft

சென்னை பெரியமேடு பகுதியில், ஆட்டோவில் சென்று கொண்டிருந்த வடமாநில பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை கண்காணிப்பு கேமரா  உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சிபானி மன்டி (55) என்ற பெண்மணி. கடந்த 8-ம்தேதி அதிகாலையில்  கண் சிகிச்சைக்காக உறவினர்களுடன் சென்னை வந்த சிபானி மன்டி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  TN 05 AC 3587 என்ற ஆட்டோ மூலம் நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோ பெரியமேடு EVR சாலை காந்தி இர்வின் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் ஓரமாக அமர்ந்து இருந்த சிபானி மன்டியின் கைப்பையை பறித்துக் கொண்டு சென்றனர்.

அதற்குள் ரூ. 20 ஆயிரம், 3 ஏடிஎம் கார்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்த பெறப்பட்ட புகாரின் பேரில் பெரியமேடு போலீசார், சம்பவம் நிகழந்த இடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வன், சீனிவாசன் ஆகியோரைத் தேடிக்  கைது செய்தனர்.  மேலும் தலைமறைவாகி உள்ள அருண்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close