இளம் பெண் தீயில் கருகி பலி... கொலை செய்தது யார்...?

  அனிதா   | Last Modified : 11 May, 2019 08:25 am
young-girl-killed

மானாமதுரை அருகே இளம் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி சாலையில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பெண் யார் என்றும், பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close