திருச்சி விமானநிலையத்தில் ரூ. 4.80 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 11 May, 2019 09:01 am
foreign-currency-notes-seized-in-trichy-airport

திருச்சி விமானநிலையத்தில் ரூ. 4.80 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த டைகர் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருவாரூரை சேர்ந்த நூருல் அமீன் என்பவர் தனது கைப்பையில் 25 ஆயிரம் சவுதி ரியால் (இந்திய ரூபாய் மதிப்பில் 4.80 லட்சம் ரூபாய்) மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close