குடிப்பதை தட்டிக் கேட்டதால் கணவர் தற்கொலை!

  அனிதா   | Last Modified : 11 May, 2019 12:04 pm
husband-is-suicide

கும்பகோணத்தில் குடித்துவிட்டு வருவதை மனைவி தட்டி கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை உத்திரையை சேர்ந்தவர் வீராசாமி மகன் மகேந்திரன்(45). இவர் தினந்தோறும் குடித்து வந்ததால், குடல் அழுகி வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரது மனைவி ஜோதி(37) மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து குணப்படுத்தினார்.

ஆனாலும் மகேந்திரன் மீண்டும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், மனைவி ஜோதி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், தற்கொலை செய்து கொள்வதற்காக கடந்த 8 ந்தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதை கண்ட உறவினர்கள் மகேந்திரனை மீ்ட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மகேந்திரன் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்து விட்டார். இது குறித்து சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close