குறைந்து வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்: நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்!

  அனிதா   | Last Modified : 11 May, 2019 12:49 pm
the-water-is-reduced-in-siruvani-dam

கோடை காலத்தையொட்டி கோவையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இம்மாத இறுதி வரை மட்டுமே தண்ணீர் விநியோகிக்க முடியும் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரளாவில் இருந்தாலும் அந்த அணையின் நீரை அதிகளவில் பயன்படுத்துவது கோவை தான். சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்பட்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, வழியோரமுள்ள  22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் ஏறத்தாள 23 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதாலும், மழை இல்லாத காரணத்தாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 49 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இருப்பு இம்மாத இறுதி வரை மட்டுமே விநியோகிக்க முடியும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மழை பெய்தால் தான் அணையில் இருந்து நீர் எடுக்க முடியும் எனவும், சிறுவாணி அணையில் மழை குறைந்து நீர் பெறுவதில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநகரில் சிறுவாணி குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு பில்லூர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குழாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close