கஞ்சா கடத்தல்: ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது!

  அனிதா   | Last Modified : 12 May, 2019 06:29 pm
106-kg-cannabis-smuggling-two-arrested-from-andhra-pradesh

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 106 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி சமயபுரம், பள்ளிவிடை பாலம் அருகே லால்குடி டி.எஸ்.பி ராஜ்சேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தியபோது, அதில்106 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த  கெளசிக் (24), துர்காராவ் (24) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close