பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளர்

  அனிதா   | Last Modified : 12 May, 2019 01:21 pm
police-inspector-died-of-heart-attack

மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன், பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன். இன்று காலை ரோந்து பணியினை மேற்கொண்டு வந்த அவர், சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சக காவல் துறையினர் விளையாடி கொண்டிருந்ததை கண்டு மைதானத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அவர்களுடன் சற்று நேரம் விளையாடிவிட்டு அங்கு அமர்ந்துபேசி கொண்டு இருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மாரடைப்பால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close