அரசு பேருந்து மோதி மூதாட்டி பலி

  அனிதா   | Last Modified : 12 May, 2019 04:20 pm
oldster-death-in-government-bus-accident

விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து மோதி மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கோ. ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மனைவி சின்னம்மா (60). இவர் இன்று காலை அவரது வீட்டிலிருந்து விருத்தாசலம் செல்வதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில், சின்னம்மா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த கம்மாபுரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close