ஆடுகளின் கழுத்தை கடித்து ரத்தம் குடித்த மர்ம விலங்கு!

  அனிதா   | Last Modified : 12 May, 2019 04:36 pm
mysterious-animal-that-killed-the-sheep

மணப்பாறை அருகே ஆடுகளின் கழுத்தை கடித்து ரத்தத்தை மட்டும் உறிஞ்சு குடித்துவிட்டு சென்ற மர்ம விலங்கு குறித்து விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சுக்காம்பட்டி அருகே உள்ள குப்பனார்பட்டி குருமலைக்களம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் 25 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு சென்ற நிலையில், மலைப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு ஒன்று நள்ளிரவு பட்டிக்குள் புகுந்து 14 ஆடுகளின் கழுத்து பகுதியை கடித்து ரத்தத்தை மட்டும் உறிஞ்சி விட்டு அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளது.  

இதில் 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 6 ஆடுகள் உயிருக்கு போராடிவரும் நிலையில், அதற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மருங்காபுரி தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இறந்த ஆடுகளை  பிரேத பரிசோதனை செய்ததில், ஆடுகளின் ரத்தம் முழுமையாக உறிஞ்சப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆடுகளை கொன்று ரத்தத்தை உறிஞ்சிய மர்ம விலங்கு எது? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடுமையான வறட்சியால் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில், கால்நடைகளை நம்பி வாழ்ந்து வரும்போது இதுபோன்று மர்ம விலங்குகளால் கால்நடைகள் பாதிக்கப்படுவது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே, வனப்பகுதியில் இருந்துதான் மர்ம விலங்கு வந்து ஆடுகளை தொடர்ந்து கொன்று வருவதாகவும், அதனை தடுக்க வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close