சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, சிக்னல் கோளாறு காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
சென்னை மெட்ரோ நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களை வைத்து பரீச்சார்த்த முறையில் ரயில் சேவை மேற்கொண்டு வருகிறது. நிரந்தர ஊழியர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து இந்நடவடிக்கையில் மெட்ரோ நிர்வாகம் இறங்கியுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களை கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், சிக்னல் கோளாறு உள்ளிட்ட தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் மெட்ரோ ரயில் சேவையில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்று, செனாய் நகர் முதல் சென்ட்ரல் வரை சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரை இயக்கப்பட்ட ரயில்களும், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இதனால் மெட்ரோ பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
newstm.in