குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் குவியும் சுற்றுலாப்பயணிகள்!

  அனிதா   | Last Modified : 12 May, 2019 06:02 pm
tourists-accumulating-in-kurumbapatti-forest-zoo

விடுமுறையையொட்டி குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களின் குடும்பங்களுடன் சென்று கோடைவிடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஏற்காடு சுற்றுலா தளத்தின் அடுத்த பகுதியாக விளங்கும் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா சேலத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.

இந்த பூங்காவானது 1981ஆம் ஆண்டு 11 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்போது 71 புள்ளி 37 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது

இந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை மயில்கள் தோகை விரித்து நடனமாடி மகிழும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடனும் வியப்புடனும் பார்த்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, துள்ளித் திரியும் புள்ளிமான்கள், யானை, முதலை, பாம்புகள், கடல் மான், ஆமை, குள்ளநரி, வங்காநரி,  நீர்பறவைகள், ஆமைகள் எனப் பல உயிரினங்கள் இந்த உயிரியல் பூங்காவில் உள்ளன.

இதனை உள்ளூர் மட்டுமின்றி  பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தங்களின் குடும்பங்களுடன் வந்து பார்த்து ரசித்து தங்களின் குடும்பங்களுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்த பூங்காவில் முதியவர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது விடுமுறை நாட்கள் என்பதால், அனைத்து தரப்பு மக்களும் தங்களின் குடும்பங்களுடன் சென்று கோடைவிடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும், இந்த பூங்காவின் பராமரிப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய குடிநீர் வசதியும், போதிய கழிப்பிட வசதியும் செய்து தரப்படவில்லை என சுற்றுலாப் பயணிகள் வேதனை  தெரிவித்துள்ளனர். மேலும், காலியாக உள்ள இடங்களில் பல விலங்குகளை அறிமுகப்படுத்தி, வண்டலூர் பூங்காவை போன்று விரிவுபடுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close