சொத்து தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

  அனிதா   | Last Modified : 12 May, 2019 06:40 pm
sickle-cuts-for-women-in-property-dispute

கும்பகோணம் அருகே, சொத்து தகராறில்தன்னை அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கைவிடுத்துள்ளார். 

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர், காகித பட்டறையை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி துர்காதேவி(30) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துர்காதேவிக்கும், இவரது உறவினரான மாணிக்கம் மகன்கள், வெற்றிவேல் மற்றும் சந்தானம் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி சொத்து பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது,  சகோதரர்களான வெற்றிவேல் மற்றும் சந்தானம் ஆகிய இருவரும், தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, துர்காதேவியின் கால் மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டினர். 

இதில் படுகாயமடைந்த துர்காதேவி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துர்காதேவி பந்தநல்லூர் காவல் நிலையம் மற்றும் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் 4 நாட்கள் முன்பு புகார் அளித்தும், ஆன்லைனில் புகார் செய்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என துர்காதேவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close