ரூ.5 லட்சம் மதிப்புடைய வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 12 May, 2019 06:51 pm
seized-foreign-liquor-worth-rs-5-lakh

கும்பகோணத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, ரூ.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

வெளிமாநிலத்தில் இருந்து, பீர் உள்ளிட்ட மதுபாட்டில்கள் விற்பனைக்காக அனுமதியின்றி கும்பகோணம் கொண்டுவரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், மேற்கு காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, ராமசாமி கோயில் அருகே வந்த வாகனத்தை நிறுத்தினர். வாகனத்தில் வந்த கும்பல் தப்பியோடியது. இதையடுத்து வாகனத்தை சோதனையிட்டபோது, 180 மிலி அளவு கொண்ட 3,362 மது பாட்டில்களும், 120 பீர் பாட்டில்களும் இருந்தது தெரிய வந்தது. பின்னர் மதுபானங்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close