திருச்சி மத நல்லிணக்க தேவாலய தேர்பவனி

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 11:05 am
tiruchy-church-function

இலால்குடி  அருகே பழமையான ,அருள் நிறை அடைக்கல அன்னை ஆலய  தேர்பவனி. மத நல்லிணக்க விழாவாக நடைபெற்றது. இத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு  தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

திருச்சி மாவட்டம், இலால்குடி  அருகே உள்ள  பெரியவர் சீலி ஆலயத்தில்  ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி,  இந்த ஆண்டும் கடந்த 05 ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று  மாலை நடைபெற்றது. தேவாலயம் முன்பு   அலங்கரிக்கப்பட்டு, அருள்நிறை அடைக்கல அன்னை சொரூபம் வைக்கப்பட்ட , திருத்தேரை கிறிஸ்துவ மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இலால்குடி பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும், இத்தேவாலய திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் திருச்சி,தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close