கோவையில் மனிதனை கொன்று, தின்ற புலி, அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 01:44 pm
tiger-attack-in-coimbatore

கோவை மாவட்டம்  வால்பாறை அருகே உள்ள  மலுக்கப்பாறை, பெரும்பாரையை சேர்ந்த ஆதிவாசி பழங்குடி காலனியில் வசிப்பவர்  தங்கப்பன் வயது 80.  இவர் தேன் எடுப்பதற்காக‌ கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வனப்பகுதிக்குள் சென்று உள்ளார். இந்நிலையில்  3 நாட்களை கடந்தும் வீடு திரும்பாத  தங்கப்பனை தேடி  அவரது உறவினர்கள் காட்டிற்குள் சென்றுள்ளனர்.

அப்போது,  தங்கப்பனை புலி அடித்து  கொன்றுதுடன், உடலை தின்று விட்டு மீதத்தை விட்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், தகவலின் அடிப்படையில் அங்கு வந்த  கேரளா வனத்துறை சிதறி கிடந்த தங்கப்பனின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கேரளா திருசூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அதோடு புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க, புலியின்  தடயங்களை சேகரித்து வருகின்றனர்.  .இச்சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close