கும்பகோணத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 03:17 pm
mother-and-son-suicide-in-kumbakonam

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை திம்மக்குடியை பகுதியில் உள்ள‌ மணவேளி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் இவரும் சுபஸ்ரீ என்ற பெண்ணும் கடந்த  8 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதியருக்கு   அபிஷேக் என்கிற 5 வயது ஆண் குழந்தை இருந்துள்ளான். இந்நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த   சுபஸ்ரீ கடந்த 11 ந் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் 11 ந்தேதி இரவு மகன் அபிஷேக், வயிற்றுவலியால் துடித்துள்ளான். இதனையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட  அபிஷேக்,  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டான். இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் அபிஷேக்கின் வயிற்றில் விஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள சுவாமிமலை காவல்துறையினர், சுபஸ்ரீ துாக்கிட்ட அன்று குழந்தைக்கு விஷத்தை கொடுத்தாரா? அல்லது உறவினர்கள் யாராவது விஷம் கொடுத்துள்ளனரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close