திருச்சி - உயரழுத்த மின் கோபுரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்!

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 03:22 pm
a-young-man-hanging-in-an-elite-electric-tower-in-trichy

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டி அருகே உள்ள கருங்காடு என்ற இடத்தில் உயரழுத்த மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த மின் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அதனையடுத்து,  சம்பவம் குறித்து பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர் தணிமாணிக்கம்பட்டியைச் சேர்ந்த காமராஜ் (23) என்பதும், திருச்சியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், தற்போது தூக்கில் பிணமாக தொங்கியதும் தெரியவந்தது. 

இதையடுத்து சடலத்தை  பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்.  இறப்பிற்கான காரணத்தை அறியும் நோக்கில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக உயரழுத்த மின்கோபுரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close