சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பாறையாக காட்சியளிக்கும் குற்றால அருவி!

  அனிதா   | Last Modified : 13 May, 2019 04:11 pm
the-coutrallam-falls-is-without-water

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்து பாறையாக காட்சியளிப்பது சுற்றுலா பயணிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே அமைந்துள்ளது குற்றால அருவி. இது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், அருவியில் கொட்டும் தண்ணீர் குளிர்ச்சியானதாகவும் மூலிகை தன்மைவாய்ந்ததாகவும் இருக்கும். இதனால் குற்றால அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் குளியல் போட்டு, மீன் வாங்கி சமைத்து உண்டு மகிழ்வர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஆனால், தற்போது நிலவி வரும் வறட்சி மற்றும் சுட்டெரிக்கும் வெயில் காரணாக குற்றாலம் மெயின் அருவி தண்ணீரின்றி வெறும் பாறையாக காட்சியளிக்கிறது. ஐந்தருவியிலும் குறைவான தண்ணீர் வருவதால் ஆண்களும், பெண்களும் ஒரே பகுதியில் குளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close