சென்னை - மது போதையில் மரத்தின் மீது மோதி இருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 04:15 pm
accident-in-chennai

மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள்  வெங்கடேஷ்(28),விஷ்ணு(24), பாரதிராஜா,முத்து. இவர்கள் நான்கு பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் மிக வேகமாக வந்துள்ளனர். 

அப்போது, சென்னை சாந்தோம் பாபநாசம் சிவன் சாலையில்  வந்துகொண்டிருந்த போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் அதன் மீது மிக வேகமாக ஏறியதில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து,  சாலையின் ஓரமாக உள்ள வீட்டிற்கும் மரத்திற்கும் இடையில் மோதியுள்ளது.

இந்த  விபத்தில் விஷ்ணு மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும், பாரதிராஜா,முத்து ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்து உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த அனைவருமே மது அருந்தி இருந்தது தெரிய வந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close