மநீம கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 09:14 am
police-security-for-the-mnm-party-office

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சமீதத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்தர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறினார். இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக, இந்து முன்னணி கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ரோந்து வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்காக மதுரையில் முகாமிட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close