தாகத்தால் இறந்து போன 4 வயது யானை!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 11:17 am
4-year-old-elephant-dead

புளியங்குடி வனப்பகுதியில் கடும் வறட்சி காரணமாக குடிப்பதற்கு நீரின்றி 4வயது பெண் யானை உயிரிழந்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான புளியங்குடி வனப்பகுதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதை கண்ட வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி யானை இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தினர். 

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் இறந்த யானையை பரிசோதனை செய்தார். பரிசோதனையில், நீர் நிலைகள் வறண்டு போன நிலையில், தாகத்தை தணிக்க அடிவாரப்பகுதிக்கு வந்த யானை நீரின்றி இறந்து போனது தெரியவந்தது. 

வனவிலங்குகள்  குடிப்பதற்கு நீரில்லாமல் தாகத்தால் இறந்து போகும் சூழ்நிலை உருவாகியிருப்பது வனவிலங்கின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது போன்று மேலும் பல உயிர்கள் பலியாகாமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close