நீதிமன்றம் முன்பு இருவருக்கு அரிவாள் வெட்டு!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 12:09 pm
murder-attempt-in-near-by-court

கோவை நீதிமன்றம் முன்பு இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிசென்ற மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

கோவை மாவட்டம் உப்பிலி பாளையம் சிக்னல் அருகே நடந்து சென்ற பிரதீப், தமிழ் என்ற இரண்டு வாலிபர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் கோவை நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வெளியே வந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close