வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது.!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 12:53 pm
training-for-vote-count-started

மக்களவை தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்கான பயிற்சி வகுப்புகள் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கும் எண்ணும் பணியின் போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து, ஒப்புகை சீட்டுகளும்  எண்ணப்பட உள்ளதால் தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி இன்று சென்னையில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தலைமையில் வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த பயிற்சி முகாமில் முதன்முறையாக சுமார் 60 ஆயிரம் தமிழக ராணுவ வீரர்களின் வாக்குகளை கியூ.ஆர். கோடு முறையில் எண்ணுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதில் இணை தேர்தல் அதிகாரி தீபக் ஜேக்கப், மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி கோவிந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close