பட்டபகலில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கொள்ளை!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 03:46 pm
robbery-in-the-subsequent-three-houses

திருச்சி மாவட்டம் திருமானூர் கிராமத்தில் பட்டபகலில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில்  25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.77 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள திருமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. மளிகை கடை உரிமையாளரான இவர் நேற்று காலை தனது மகள் ஊரான நெட்டவேலம்பட்டியில்  நடைபெறும் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். 

திருவிழா முடிந்து இரவு 10 மணியளவில் வீடு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

அதேபோல் இவர் வீட்டின் அருகே உள்ள விசாலாட்சி என்ற மூதாட்டியின் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்கத்தையும், அதற்கு அடுத்த வீடான சுந்தரம் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் கிடைக்காததால் பொருட்களையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

பட்டப்பகலில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் குறித்து துறையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close