தவறான சிகிச்சை: திமுக வேட்பாளர் மருத்துவமனை மீது வழக்கு பதிவு!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 03:39 pm
case-filed-against-dmk-candidate-saravanan-s-hospital

மதுரையில் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் திமுக வேட்பாளர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனை மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனை நரிமேடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நிலையூரை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் உடல் நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பஞ்சவர்ணத்திற்கு ஊசி செலுத்தியதாகவும், அதன் பிறகு பஞ்சவர்ணம் சுயநினைவை இழந்து மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, ஒரு லட்சம் பணம் கட்டினால் தான் மேற்கொண்டு சிகிச்சை வழங்க முடியும் என மருத்துவமனை கூறியுள்ளது. 

ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை கட்ட முடியாததால் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் பஞ்சவர்ணம் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் உயிரிழந்த பஞ்சவர்ணத்தின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.  திமுக வேட்பாளருக்கு சொந்தமான மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக வேட்பாளர் சரவணன் தனது மருத்துவமனையில் இருதய அறுவைசிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close