பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ ஆய்வு!

  அனிதா   | Last Modified : 15 May, 2019 08:46 am
pollachi-sex-case-cbi-study-in-tirunavukkarasu-house

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி ஒரு இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார் இந்த பாலியல் வழக்கில்  மணிவண்ணனையும் சேர்த்து வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு எடுத்தது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிபிஐ போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில்,  பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுக்கு சொந்தமான சின்னப்பன் பாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிபிஐ போலீசார் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட வீடாக கருதப்படும் இந்த பண்ணை வீட்டில் வீடியோ பதிவுகளை கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். 

தொடர்ந்து, அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நான்கு பேர் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close