திருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

  அனிதா   | Last Modified : 15 May, 2019 10:10 am
dmk-president-stalin-campaign-in-thiruparankundram

மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் பொது மக்களிடம் வாக்குசேகரித்து வருகிறார். 

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து விரகனூர், கோழிமேடு பகுதி பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். 

புளியகுளம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதைவிட அதிகமாக திமுக மக்களுக்காக பணியாற்றியுள்ளது என தெரிவித்தார். பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக ரூ.400 கோடி செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கான பிரதமராக இல்லாமல் வெளிநாட்டு பிரதமர் போல் நரேந்திர மோடி நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close