2 மணி நேரம் தொடர்ந்து அம்பு எய்து சாதனை படைத்த 2 வயது சிறுமி!

  அனிதா   | Last Modified : 15 May, 2019 12:50 pm
2-year-old-girl-achievement

திருச்சியில் 2 வயது சிறுமி 2 மணி நேரம் அம்பு எய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

திருச்சியைச் சேர்ந்த சகாய விஜய் ஆனந்த் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் ஆராதனா. 2 வயது சிறுமியான இவர்  10 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கினை நோக்கி தொடர்ந்து 2 மணி நேரம் நாணில் அம்பினை தொடுத்து எய்தார். இந்த சாதனை நிகழ்வானது எவரெஸ்ட் சாதனை புத்தகம் மற்றும் ஜெட்லி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

சிறு வயதிலேயே சாதனை புரிந்த ஆராதனாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுமி கடந்த 3 மாத காலம் அம்பு எய்வதற்கான பயிற்சி எடுத்து கொண்டு இந்த சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக 8 மீட்டர் தொலைவில் நின்று அம்பு எய்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை முறியடித்து தற்போது 10 மீ தொலைவில் நின்று அம்பெய்து புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார் குழந்தை ஆராதனா.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close