சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்ச பிரகார விழா!

  அனிதா   | Last Modified : 15 May, 2019 03:27 pm
pancha-prakara-festival-at-samayapuram-mariamman-temple

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்ச பிரகார விழாவையொட்டி, இன்று வட திருக்காவிரியிலிருந்து வெள்ளி மற்றும் தங்க குடங்களில், அம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. 

ஆயிரம் கண்களுடைய சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெருங்கலை, ஐம்பெரும்பீடம், மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ளது பஞ்ச பிரகார உற்சவம். 

மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னிநட்சத்திரத்தில் வெப்பத் தாக்கத்தை தணிப்பதற்காக இவ்விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பஞ்ச பிரகார விழா கடந்த 6 ந்தேதி தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். 

இவ்விழாவையொட்டி, இன்று இக்கோயில் பட்டாச்சாரியர்கள் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தமும், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் பட்டாச்சாரியர்கள் வெள்ளி குடங்களில் தீர்த்தமும் கொண்டு வந்து ஆஸ்தான மண்டபத்திலிருந்து  பரிவாரங்கள் புடைசூழ மேளதாளத்துடன் முக்கிய விதிகளில் உலா வந்து கொள்ளிடத்திலிருந்து  வரப்பெரும் திருமஞ்சனத்துடன் சிறப்பு வேத பாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close