திருச்சி காவிரி ஆற்றங் கரையில் மழை வேண்டி யாகம்

  Newstm Desk   | Last Modified : 15 May, 2019 05:23 pm
puja-for-rain-in-trichy

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வேண்டி திருச்சி காவிரி ஆற்றின் கரையில் விவசாய சங்கத்தின் சார்பில் யாகம் செய்யப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

திருச்சியில் காவிரி ஆற்றினையொட்டிய மாவட்டங்களில் தற்போது காவிரியில் தண்ணீர் இன்மை மற்றும் சரியாக மழை பொழியாததால் விவசாயம் செய்வது சாத்தியமில்லாத ஒன்றாகியுள்ளது. அதே நேரம் தண்ணீரை சேமிக்க வேண்டிய தமிழக அரசும் அதற்கான முக்கியத்துவம் அளிக்காமல் மெத்தனமாக உள்ளது.

இதனிடையே 'பாரதிய கிசான் சங்கம்' சார்பில்  தமிழகத்தில் மழை பொழிய வருண பகவானை வேண்டி, திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகில் வேத விற்பன்னர்களைக் கொண்டு (பர்ஜன்ய சாந்தி ஹோமம்) மாபெரும் யாகம் செய்யப்பட்டது.

இந்த யாகத்தின் போது வேதவிற்பன்னர்கள் நீரில் அமர்ந்தபடி வேதமந்திரங்களை  பாராயணம் செய்ததுடன், குண்டங்கள் அமைத்து, வருண ஜெப மந்திரங்களை பாராயணம் செய்து வேள்வி நடத்தினர். இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close