கோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட‌  4 இளைஞர்களுக்கு நீதிமன்ற காவல் !

  Newstm Desk   | Last Modified : 15 May, 2019 06:08 pm
4-young-people-are-order-to-be-kept-in-custody-in-covai

கோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட்ட பிறகு, தனது நண்பரான தமிழ்வாணனுடன்  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது உப்பாலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இவர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த‌ பிரதீப், தமிழ்வாணான் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதுதொடர்பாக பந்தயசாலை காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை  தேடி வந்தனர்.

 கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரதீப், கணபதி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹரிஹரன் என்பவரை  கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்திற்காக, பழிக்கு பழி வாங்கும் வகையில் பிரதீப்பை, இந்த கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கணபதி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ஹரி, தனபால், சூர்யா ஆகிய 4 பேரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர். 


தலைமறைவாக உள்ள ஹரிஹரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார், ஹரி, தனபால், சூரியா ஆகிய 4 பேரை காவல் துறையினர் கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்

நான்கு பேரையும் வருகின்ற 29 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close