திருச்சியில் பாம்பு போல் தோற்றம் உள்ள வேப்பங்குச்சி

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 11:40 am
neem-wood-stick-in-appearance-like-a-snake-in-trichy

திருச்சி மணப்பாறையில் வேப்ப மரத்தில் உடைக்கப்பட்ட குச்சி உருளையாக இல்லாமல் திடீரென பாம்பு போன்ற தோற்றத்தில் காட்சி அளித்துள்ளது.  இந்த காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா இன்று நிறைவு பெற்றது. இதையடுத்து விடையாற்றி நிகழ்ச்சிக்காக அம்மன் காப்பு, வஸ்திரம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு பூசாரி மற்றும் பக்தர்கள் வாகைக்குளம் பகுதியில் உள்ள கிணற்றிற்கு சென்றனர். அப்போது பக்தர்கள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்து வேப்பிலை இலை போட்ட மஞ்சல் நீரை பூசாரியின் பாதங்களில் ஊற்றுவது வழக்கம். 

இதற்காக, காமராஜர் நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரத்தில் ஏறி இலை பறிப்பதற்காக குச்சியை உடைத்துள்ளனர். ஆனால் உடைக்கப்பட்ட குச்சி உருளையாக இல்லாமல் திடீரென பாம்பு போன்ற தோற்றத்தில் காட்சி அளித்துள்ளது.


இந்நிலையில் அங்கு அருள் வந்து ஆடிய பெண் ஒருவர் சாமி மரம் என்பதாகவும் அதை வழிபடும்படி கூறியதை அடுத்து பாம்பு போல் இருந்த குச்சியை வைத்து வழிபட்டு வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், பலரும் அந்த பாம்பு போன்ற தோற்றமுடைய குச்சியை பார்வையிட்டு வணங்கி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close