சென்னையில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 01:02 pm
share-auto-accident-in-chennai

சென்னை அண்ணா நகர் அருகே ஷேர் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில், பெண்கள் உட்பட  8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய வேன் ஒட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை 4:30 மணி அளவில் சென்னை அயனாவரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி  ஷேர் ஆட்டோ  கோயம்பேடு மார்க்கெட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

 ஷேர் ஆட்டோ அண்ணா நகர் ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்த பொழுது, பின்னால் வந்த வேன், வேகமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணித்த அயனாவரத்தை சேர்ந்த அரசு (65),ரவி (40), கவியரசு (37),பச்சையம்மாள் (56), திலகவதி, கோகிலா(40) , கலையரசி(54) , சுகுணா (54) ஆகிய எட்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.   இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வேன் ஒட்டுனரான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close