சென்னையில் பிரபல டான்ஸர் தூக்கிட்டு தற்கொலை...!

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 01:05 pm
dancer-suicide-in-chennai

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த‌ நடிகரும், பிரபல டான்ஸருமான பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகவா லாரன்ஸின் நடன குழுவில் இருப்பவர் டான்ஸர் பரத். இவர் மின்சாரக் கனவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் போன்ற பிரபலங்களின் பிள்ளைகளுக்கு நடனம் பயினறு வந்துள்ளார். 


சென்னை விருகம்பாக்கத்தில் தனது நண்பர்களுடன் வசித்து வந்த பரத், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், பரத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close