தந்தை வாங்கிய கடனுக்காக கொத்தடிமையாக வேலை செய்த மகன் மீட்பு!

  ராஜேஷ்.S   | Last Modified : 16 May, 2019 09:03 pm
recovery-of-bonds-in-kumbakonam

கும்பகோணம் அருகே தேவன் குடியில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 55 பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் அருகே தேவன்குடி கொள்ளிடம் கரையோரம், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பலர் வேலை செய்வதாக கொத்தடிமைகள் மீட்பு அமைப்பிற்கு புகார்கள் சென்றது. அதையடுத்து இன்று கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமி, பாபநாசம் வட்டாச்சியர் மற்றும் காவல் துறையினர் தேவன்குடியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வில் மூன்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 55 பேர் மீட்கப்பட்டனர் . மீட்கப்பட்ட 55 நபர்களில் 50 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய நபர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கணேசன் என்பவர் செங்கல் சூளை உரிமையாளரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், கணேசன் இறந்துவிட கடனை அடைப்பதற்காக அவரது மகன் பாக்யராஜை கொத்தடிமையாக  செங்கல் சூளையில் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மீட்கப்பட்ட 55 நபர்களில் 15 பேர், 15 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close