கமலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு : இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் குற்றச்சாட்டு

  ராஜேஷ்.S   | Last Modified : 16 May, 2019 09:40 pm
kamal-link-isis

’கமல்ஹாசன் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார். குறிப்பாக ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்’ என்று மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சம்பத் குமார் இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

சேலம் வைஸ்யா திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்க வருகை தந்த அவர், விழாவுக்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியது:

" நடிகர் கமல்ஹாசன் ஒரு ஹிந்து விரோதி. அவருக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களிடமிருந்து நிதி உதவி வருகிறது. சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் அவர் கூட்டணி வைத்திருக்கிறார் . குறிப்பாக ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்.

கமல்ஹாசன் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரின் இந்த கருத்துக்கு எதிராக பல்வேறு கட்ட கண்டனப் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அகில இந்திய சன்யாசிகள் அமைப்பு சார்பில், கமலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் .

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close