பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: வழக்கறிஞருக்கு போலீஸ் வலைவீச்சு

  அனிதா   | Last Modified : 17 May, 2019 12:54 pm
cake-was-cut-by-knife-in-birthday-celebration

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் விடுதியில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னையில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்தநாளின்போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டாகத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய ரவுடி ஒருவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல, அயனாவரத்தில் கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் அவர்களின் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொது இடத்தில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகர் அருகே பாடிக்குப்பம் ரெயில் நகரை சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் வழக்கறிஞராகவும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மத்திய சென்னை சட்ட ஆலோசகராகவும் உள்ளார். இவர் கடந்த 24 -ஆம் தேதி தனது பிறந்தநாளை அண்ணாநகரில் உள்ள பிரபல  தனியார் உணவு விடுதியான ராக் ரெஸ்டாரண்டில் கொண்டாடி உள்ளார்.

அப்பொழுது இளைஞர்கள் படை சூழ, கிரிடம் சந்தன மாலையோடு 3 அடி கொண்ட பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது வைரலாகி உள்ளது. அதில் அவர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close