ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்!

  அனிதா   | Last Modified : 17 May, 2019 01:01 pm
sri-selva-mariamman-temple-maha-kumbabishekam

திருச்சியில் ஸ்ரீ செல்வ மாரியம்மன்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக  திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம்  ஊராட்சியில் உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தில் 80 வருட பாரம்பரியமிக்க அருள்மிகு  செல்வ மாரியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி முளைப்பாரி இட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு,  மாலை கணபதி ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை, மஹாவட்சுமி் ஹோமம், வாஸ்து ஹோமம், வேதாபாராயணம், முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.

3ஆம் நாளான இன்று   இரண்டாம் கால யாகபூஜை, வேதபாராயணம், கோ தரிசனம், யாத்ரதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று  மூலஸ்தானத்தில் உள்ள கோபுரகலசத்தில் தீர்த்தம் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close